இந்திய தேசிய ராணுவத்திற்கு பெரும் படையை அனுப்பிய பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என மத்திய அமைச்சர் எல். முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், “தேசியமும் தெய்வீகமும் தன் இரு கண்கள்” என்று உரைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் ஜெயந்தி விழா இன்று..!! ஆன்மீகவாதியாகவும், தேசியவாதியாகவும்,சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் வாழ்ந்தவர்.
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் தலைமையில் இருந்த, இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.
ஏழை எளிய மக்களின் நலனுக்காக போராடியவர். தேசத் தொண்டு – தமிழ்த் தொண்டு – சமயத் தொண்டு – அரசியல் தொண்டு என எல்லாவற்றிலும் ஒரு சேர பயணித்து மக்களுக்காக குரல் கொடுத்த பசும்பொன் அவர்கள் ஆற்றிய நற்பணிகளை போற்றி புகழ்ந்து வணங்குவோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.