தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரு கண்களாக கருதிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “தேச விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் போராடிய வீரர், தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜை தினம் இன்று. தேசியத்தையும் தெய்வீகத்தையும் தமது இரு கண்களாகக் கருதிய மாமனிதர். அனைத்து சமுதாய மக்களும் ஆலயத்துக்குள் செல்ல, ஆலய நுழைவுப் போராட்டத்தை முன்னெடுத்தவர்.
தென்னகத்தின் போஸ் என்று போற்றப்பட்டவர். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி, ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு முக்கிய பங்காற்றியவர். ஆன்மீகம் மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியலை முன்னெடுத்து, பெருமைக்குரியவராகத் திகழ்ந்த ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழை போற்றி வணங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.