அயோத்தியில் 28 லட்சம் அகல் விளக்குக்களை ஏற்றி இன்று தீபோற்சவ நிகழ்வு நடைபெறவுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தீபோற்சவ நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, சரயு நதியின் படித்துறைகளில் சுமாா் 28 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி, உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தீபோற்சவ நிகழ்வில் சீன தயாரிப்பு பொருட்களுக்கு மாற்றாக, முழுக்க முழுக்க உள்ளூர் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படவுள்ளன. தீபோற்ச நிகழ்வையொட்டி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், சரயு படித்துறைகளுக்கு செல்லும் 17 சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, தீபோற்சவ நிகழ்வையொட்டி, ராமா் கோயில் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.