மதுரையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் தீபாவளி கொண்டாடினார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை அருகே ரோஜாவனம் என்ற ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, புத்தாடைகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி R. சுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.