தனது நிலங்களை ஏழைகளுக்கு வழங்கி, அவர்களின் வாழ்வில் முத்துராமலிங்க தேவர் ஒளியேற்றியதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த இபிஎஸ், எம்ஜிஆரின் ஆட்சிக்காலத்தில்தான், தேவர் ஜெயந்தி அரசு விழாவாக கொண்டாட உத்தரவிடப்பட்டதாக கூறினார். நந்தனத்தில் முத்துராமலிங்க தேவரின் சிலையை திறந்துவைத்ததுடன், பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜெயலலிதா தங்கக்கவசம் வழங்கியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.