ஈரோட்டில் ஜவுளி வளாகத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைத்திருந்ததை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அப்துல் கனி ஜவுளி சந்தை அகற்றப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜவுளி வளாகம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணி ரகங்களை கொள்முதல் செய்து வியாபாரிகள் விற்பனைக்காக வைத்திருந்தனர். ஆனால் வணிக வளாகத்துக்கு வெளியே சிலர் தற்காலிக கடைகள் அமைத்து குறைந்த விலையில் ஜவுளி விற்பனை செய்து வந்தனர்.
இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் உதவியுடன் தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன.