மதுரையில் தேவர் ஜெயந்தியை ஒட்டி ஊர்வலமாக சென்ற தவெக தொண்டர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
முத்துராமலிங்க தேவரின் 62வது குருபூஜை தினத்தை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 20க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், 16க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
















