உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Nov 17, 2025, 08:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்வோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Web Desk by Web Desk
Oct 30, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி வழங்கட்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அவர விடுத்துள்ள பதிவில், தீப ஒளித் திருநாள் என்று அனைவராலும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை, பாரத தேசம் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களால் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ராம பிரான், ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து, அயோத்தி திரும்பிய நாளை தீபம் ஏற்றி தீபாவளி திருநாளாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை அழித்து தர்மத்தை நிலைநாட்டியதை நினைவுபடுத்தும் நாளாகவும் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்கள், சீக்கியர்களும் தீபாவளி பண்டிகையை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். பாரத தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இவ்விழா, அதர்மத்தின் மீது தர்மத்தின் வெற்றியையும், இருளின் மீது ஒளியின் வெற்றியையும் குறிக்கிறது.

தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர்.

இந்த ஆண்டும் அதேச உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, மன மகிழ்ச்சியுடன் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை நாம் மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகையாக மட்டுமல்லாமல் பொருளாதார பெருவிழாவாகவும் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு நடைபெறும் வர்த்தகத்தின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக தீபாவளி திகழ்கிறது. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரிடமும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கிறது.

உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று நமது பாசமிகு பாரதப் திரு. நரேந்திர மோடி அவர்கள் அறிவுறுத்தி வருகிறார். தீபாவளி தருணத்தில் நமது பகுதி மக்கள் தயாரித்த ஆடைகள், இனிப்புகளை வாங்குவோம். நமது பெருமை மிகு சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்வோம்.

இந்த நன்னாளில் அனைவரும் நல்ல உடல் நலத்தோடு வாழவும், வாழ்வில் துன்பம் விலகி, இன்பம் பெருகவும், செல்வம் செழித்து எல்லோரது இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பெருகவும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தமிழ்நாட்டில் தீய சக்திகள் அழித்து நல்லாட்சி மலர்ந்திட செய்யும் உறுதியை, தீபாவளியின் தீப ஒளி நமக்கு வழங்கட்டும் என பிராத்திக்கிறேன்.

மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Tags: L Murugandeepavali greetings
ShareTweetSendShare
Previous Post

ஈரோட்டில் வியாபாரிகள் போராட்டம் – தற்காலிக கடைகள் அகற்றம்!

Next Post

தீபாவளி பண்டிகை – பூக்களின் விலை உயர்வு!

Related News

இந்தியா கலாச்சாரத்தின் ஒற்றுமை சின்னம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்கிறது – சி.பி.ராதாகிருஷ்ணன்

மும்பை – அகமதாபத் புல்லட் ரயில் திட்டப் பணிகள் – பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

வங்க தேச முன்னாள்  பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வழக்கில் இன்று தீர்ப்பு – டாக்காவில் பயங்கர வன்முறை!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாத டாக்டர்  உமர் அகமதுவின் நெருங்கிய கூட்டாளி கைது!

ஹவாலா மூலம் பயங்கரவாத டாக்டர்களுக்கு ரூ. 20 லட்சம் – ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு அனுப்பியது கண்டுபிடிப்பு!

இந்தியா – இஸ்ரேலின் MR-SAM ஏவுகணை கூட்டு தயாரிப்பு – விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து : சிறப்பு தொகுப்பு!

ஐப்பசி மாத கடை முழுக்கை – குடந்தை நாகேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி!

கடற்படை தளத்தை தூசி தட்டிய அமெரிக்கா : கரீபியன் தீவில் அதிகரிக்கும் போர் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவ தீர்த்தவாரி விழா கோலாகலம்!

“கண்ணான கண்ணே” மைதிலி தாக்கூர் – அரசியலில் சாதித்த நாட்டுப்புற பாடகி – சிறப்பு தொகுப்பு!

பிபிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டம்!

ராமகிருஷ்ணர், விவேகானந்தர் பக்தர்கள் மாநாடு – மதுரையில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழா!

குருதட்சணை மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிதி – மோகன் பகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies