காரைக்காலில் வெளுத்து வாங்கிய மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நெடுங்காடு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
raiமேலும், திருநள்ளாறு செல்லும் சாலை, மருத்துவமனை சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. இதன் காரணமாக நாகப்பட்டினம் – சிதம்பரம் இடையிலான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.