நவம்பர் முதல் வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நவம்பர் முதல் வார இறுதியில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும், நவம்பர் 2-வது வாரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளது தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் நவம்பர் 7 முதல் 11-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது.