விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சிறுவர்கள் வெடித்த பட்டாசால் ஏற்பட்ட தீ விபத்தில் இரும்பு பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.
அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் தீபாவளியையொட்டி அப்பகுதியில் உள்ள வேடன் என்பவரது பழைய இரும்பு பொருட்கள் வைத்திருக்கும் கடை அருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, கடையில் வைக்கப்பட்டிருந்த பேப்பர் மீது தீப்பொறி விழுந்ததில் கடையில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.