தீபாவளி பண்டிகையின் போது ஈரோடு நகர மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் நகரமே வண்ணமயமாக காட்சியளித்தது.
ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இரவு நேர கொண்டாட்டத்தின் போது கண்கவர் வாண வேடிக்கையால் நகரம் முழுக்க வண்ணமயாமக காட்சியளித்தது.
பொதுமக்களின் இந்த கொண்டாட்டத்தால் ஈரோடு நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் ஒளி வீசும் பகுதியாக காட்சியளித்தன.