தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் ஊதியம் மற்றும் போனஸ் வழங்கவில்லை என கூறிய ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது ஒப்பந்த நிறுவனம் தங்களுடைய ESI, PF பணத்தை கணக்கு காண்பிப்பதில்லை எனவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.