ஈரோடு மாவட்டம், பவானி அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களை மது போதையில் இருந்த நபர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சி.எம் நகரில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் வழக்கம் போல் தங்களின் பணிகளை செய்துக்கொண்டிருந்தனர்.
அப்போது மதுபோதையில் அங்கு வந்த இளைஞர்கள் இரண்டு பேர் காவலர்களை சரமாரியாக தாக்கினர். இதில் இருவரும் காயமடைந்த நிலையில் வினோத்குமார் மற்றும் கோபால் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.