சென்னையில் சேகரிக்கப்பட்ட 50 டன் பட்டாசு கழிவுகள் கும்மிடிபூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றும் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தீபாவளி பண்டிகையை சென்னையில் மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் பட்டாசு கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன்படி, சுமார் 19 ஆயிரத்து 600 தூய்மை பணியாளர்கள் பட்டாசு கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 15 மண்டலங்களிலும் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட 50 டன் பட்டாசு கழிவுகள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றும் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து கழிவுகளை அழிக்கும் பணியில் ஆலை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.