சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் பல இடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து காணப்படும் சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நகரின் முக்கிய பழமையான கட்டிடங்களில் ஒன்றாக இருப்பது ரிப்பன் மாளிகை. சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை நூற்றாண்டு பழமையானது.
இந்தக் கட்டிடத்தில் திடீரென ஏற்பட்டுள்ள விரிசல் தான் இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பல இடங்களில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து காணப்படுவத பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மேயர் , துணை மேயர், ஆணையர் தினமும் வந்து செல்லும் நிலையில் அதிகாரிகள் கண்டும் காணாமல் அலட்சியமாக இருப்பதால், பழமையின் அடையாளமான ரிப்பன் மாளிகையை விரைவில் இழக்க கூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.