தொடர் விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக கொடைக்கானல் விளங்கி வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல் செல்லும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து கடலில் குளித்தும், அலைகளோடு விளையாடியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.