அதிபராக பதவியேற்றால் காசாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கமலா ஹாரிஸ் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் மிச்சிகனில் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தனது இறுதி பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், தான் அதிபரானால் மருத்துவக் கட்டணங்களும், நடுத்தர மக்களுக்கான வரியும் குறைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.