பிராம்ப்டனில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்துக்கள் தாக்கப்பட்டதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிராம்ப்டனில் தூதரக முகாமுக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது வருத்தமளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக நடைபெறும் தூதரக பணிகளின்போது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையூறு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள இந்திய தூதரகம்,
அதில் கலந்துகொண்டவர்கள் மட்டுமல்லாது கனடாவில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பதும் முக்கியமானது என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் மூலமாக இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், எனவே, உள்ளூர் ஏற்பாட்டாளர்கள் இதனை கவனத்தில்கொண்டு இதுபோன்ற பணிகளின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.