தெலங்கானாவில் சிலை திறப்பு விழாவிற்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பாப்பண்ணை கவுடு. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், இந்தியாவில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் ஆட்சிக்கு எதிராக தீவிர போராட்டத்தில் பங்காற்றினார்.
இந்நிலையில், பாப்பண்ணை கவுடு சிலையை மேற்கு கோதாவரி மாவட்டம் தடிப்பூர் கிராமத்தில் வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதையொட்டி அவருக்கு பிளக்ஸ் பேனர்களை வைக்க முற்பட்டபோது, எதிர்பாரதவிதமாக இரும்பு பைப்பில் மின்சாரம் பாய்ந்து 4 இளைஞர்கள் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதனால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.