ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஊராட்சிகளில் போதிய சுகாதாரப் பணிகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், பல இடங்களில் வடிகால் இல்லாமல் மழை நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் சளி மற்றும் காய்ச்சல் பரவி வருவதால், அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெறறு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பாலைக்குடி பகுதியில் 2 வயது சிறுமிக்கும், வெள்ளையாபுரம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.