இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் ரயில் உள்ளது. அரிதிலும் அரிதாக இந்த ரயிலில் பயணிக்க வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டும். அத்தகையை சிறப்புகளை கொண்ட ஜாக்ரிதி யாத்ரா ரயில் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்….
நமது பாரதத்தில் விரைவு ரயில்கள், வந்தேபாரத் என ரயில்கள் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவே நாட்டில் வாழும் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமைகிறது. அதே போன்ற ஒரு ரயில் தான் இளம் தலைமுறை தொழில்முனைவோர்களையும், பல தொழில் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பயணமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட ரயில் தான் ஜாக்ரிதி யாத்ரா ரயில் ஆகும். இது இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவை உருவாக்குதல் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
மும்பையைச் சேர்ந்த ஜாக்ரிதி சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ரயிலில் இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயணித்துள்ளனர். இந்த ரயில் பயணம் 15 நாட்கள் கொண்டதாக இருக்கும்.
வரும் 16 ஆம் தேதி மும்பையில் பயணம் தொடங்கி ஹூப்ளி, டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம் சென்னை போன்ற முக்கியமான 12 நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. டிசம்பர் 1 ஆம் தேதியுடன் அகமதாபாத்தில் பயணம் முடிவடைகிறது.
இது தொழில் சார்ந்த நகரங்களையே அதிகமாக இணைக்கும். குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை தொழில் நிறுவனங்கள் மூலம் எவ்வாறு முன்னேற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது.
இந்த ஜாக்ரிதி யாத்ரா பயணத்தில் 500 பேர் பங்கேற்கலாம் . 21 முதல் 27 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை தொழில்முனைவோர்களும் , அவர்களுக்கு வழிகாட்டியாக 28 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்துகொள்ளலாம் . இதில் வணிகம் சார்ந்தும், தொழில் சார்ந்த ஆலோசனைகள், சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள சிறந்த உதவியாக இருக்கும்.
இவ்வாறு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிட்டு விண்ணப்பத்தை உடனே பதிவு செய்து கொள்ளலாம்…..