தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடி மரத்தில், புதியதாக வளையம் வைக்கும் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த கோயில் முன்பு உள்ள கொடிமரத்தை மாற்றுவதற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்த கோயில் தீட்சிதர்கள், ஏற்கெனவே கோயில் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்
கோயில் கொடி மரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். இந்த கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரமோற்ச உற்சவம் நடத்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.