இந்திய அரசால் தடை செய்யப்பட்ட செலர்ஜின் என்ற மருத்துவ கேப்சூலை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 3 நபர்கள் சுவிட்சர்லாந்தில் கிடைக்கக்கூடிய செலர்ஜின் என்ற மருத்துவ கேப்சூல்களை கொண்டு வந்தது தெரியவந்தது.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட கேப்சூல் என்பதால் அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.