நீர்வரத்து சீரானதால் குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது நீர்வரத்து சீரானதால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
















