கிருஷ்ண ஜென்மபூமி விவகாரத்தில் மசூதி நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் சீதை பிறந்த இடமாக கருதப்படும் புனித தலத்தில், முகலாய மன்னர் அவுரங்க்சீஃப் கடந்த 17-ஆம் நூற்றாண்டில் ஷாஹி இட்கா மசூதி கட்டியதாக கூறப்படுகிறது.
அந்த இடத்துக்கு உரிமை கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதாக அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்ததை எதிர்த்து, இஸ்லாமியர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை 2 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.