தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஆயிரத்து 500 கிலோ பீடி இலை கட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை மற்றும் பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார், 160 கிலோ கடல் அட்டைகள் மற்றும் ஆயிரத்து 500 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய கடற் கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.