கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான தக்கலை, குழித்துறை, மார்த்தாண்டம், களியக்காவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது.