நெல்லை மாவட்டம் களக்காடு அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர்.
கீழகோவிலம்மாள் புரத்தைச் சேர்ந்த தர்மக்கண் என்பவர் நாங்குநேரி வானமாமலை கோயில் மடத்திற்குட்பட்ட விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில், பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை மறித்து வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமலிங்கத்திடம், தர்மக்கண் மற்றும் அவரது உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 2 காயமடைந்த நிலையில், 10-பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















