அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸும் களமிறங்கினர். இந்த தேர்தல் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4:30 மணிக்கு தொடங்கியது. அதன்படி மொத்தமுள்ள 50 மாகாணங்களின் 538 தேர்வுக்குழு உறுப்பினர்களில், 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே வெற்றி பெறுவார்.
வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை டொனால்ட் டிரம்ப் 247 தேர்வாளர்களின் வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 210 தேர்வாளர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
New York, Maryland, Washington, D.C. உள்ளிட்ட மாகாணங்களில் கமலா ஹாரிஸும், Alabama, Florida, Texas உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப்பும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.