அமெரிக்க தேர்தல் முடிவில் நமது விருப்பத்தை முன்னிறுத்துவதை விட அதனை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ய வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் நடைபெற்ற ‘ரைசினா டவுன் அண்டர்’ என்ற நிகழ்வில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது, அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்த தனது கருத்துக்களை அவர் தெரிவித்தார்.
ஒபாமாவை விட டொனால்ட் டிரம்ப் தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருக்கக்கூடும் என தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக அதிபர் பைடன்தான் காரணம் என கூறியது ஒபாமா கூறியதை அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் வளங்கள் மீது பல்வேறு அழுத்தங்கள் உள்ளதாகவும், அந்நாட்டின் ராணுவம் எதிர்காலங்களில் மோதல்களில் ஈடுபடுவது பற்றி எச்சரிக்கையாக இருக்கும் எனவும் ஜெய்சங்கர் கூறினார்.