அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் டிரம்ப், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள கவுண்டி மாநாட்டு மையத்தில் அவர் உரையாற்றினார். அப்போது, குடியரசு கட்சி மகத்தான வெற்றி பெற்றதாக தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற வைத்த மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள வேன்சுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும், உங்கள் எதிர்காலத்திற்காகவும் இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன் என அவர் தெரிவித்தார்.
வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான அமெரிக்காவை வழங்கும் வரை ஓய்வெடுக்க மாட்டேன் என்றும், இந்த முறை தமது ஆட்சி, அமெரிக்காவில் பொற்காலமாக அமையும் என்றும் அவர் கூறினார். எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனறும் டிரம்ப் கூறினார்.
பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்றும் அதனை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.