ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் கடன் மற்றும் வங்கி மோசடிகளால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்தியது. அதனைத்தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ரூபாய் 350 கோடிக்கு ஜலான் கால்ராக் கன்சோர்டியம் நிறுவனம் கைப்பற்றியது.
ஆனால் ஏலத் தொகையை அந்நிறுவனம் முழுமையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து, அந்நிறுவனம் ஜெட் ஏர்வேஸை கைப்பற்றுவதை எதிர்த்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் வழங்கிய எஸ்.பி.ஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரிவு 142 இன் கீழான அதிகாரத்தை பயன்படுத்தி ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கலைக்க உத்தரவிட்டது.