தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை கொண்டு வரப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பால் இரண்டு நாட்கள் நடத்தப்படும் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு தொடங்கியது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமித் ஷா, நமக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் எல்லையற்ற மற்றும் கண்ணுக்கு தெரியாத வகையில் உள்ளன என்றார். அதை துல்லியமாக எதிர்கொள்ள நமது இளம் அதிகாரிகள் மிக உயர்ந்த தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஆகையால் அதனை இளம் அதிகாரிகளின் பயிற்சியின் முக்கிய பகுதியாக மாற்றுவோம் என்றும் தெரிவித்தார். மேலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட, ஒரு தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை கொண்டு வருவோம் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.