புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
108 திவ்ய தேசங்களுக்கு நிகராக கருதப்படும் திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில் மற்றும் சத்யகிரீஸ்வரர் சிவன் கோயில் பிரசித்தி பெற்றதாகும் இங்கு மட்டும்தான் தமிழகத்தில் ஒரே வளாகத்தில் வைணவ திருத்தலமும் சிவன் திருத்தலமும் உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இக்கோயில்களின் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக யாகசாலை குண்டத்தில் புனித நீரை வைத்து வேத விற்பன்னர்கள் ஹோமம் வளர்த்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் விமானத்தில் உள்ள கலசங்களில் நாளை ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் கோபுரங்கள் மற்றும் சுற்று சுவர்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக காட்சியளிக்கின்றன.