வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் நோக்கில் பாமகவினர் சமூகப் பதற்றத்தை உருவாக்குவதாக, விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மஞ்சக்கொல்லை சம்பவம் தொடர்பாக சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசிய வன்னியர் சங்கத் தலைவர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
தமது கட்சியினர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள திருமாவளவன், இரு சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சிதைக்க முயற்சிப்போருக்கு துணை போய்விடக்கூடாது என கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் மீதே நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் போக்கை கண்டிப்பதாகவும், விசிக கொடியை அறுத்தது , கம்பத்தை வெட்டியது, வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது தொடர்பாக பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.