மறைந்த நாட்டுப்புற பாடகி சாரதா சின்ஹா குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆறுதல் கூறினார்.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த நாட்டுப்புற பாடகியும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான சாரதா சின்ஹா உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். அவரது இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா, குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.