திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று திருக்கல்யாணம் வைபவம் நடைபெறவுள்ள நிலையில், திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி கோலாமலமாக தொடங்கியது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பின் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில், கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று நள்ளிரவு சுவாமிக்கும் வள்ளி, தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வை காண காலை முதலே கோயிலில் குவியும் பக்தர்கள், மொய் பணம் செலுத்தி பிரசாதம் வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பால்குடம் எடுத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.