சென்னை பட்டினப்பாக்கத்தில் போலீசாரிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட சந்திரமோகன், தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினா லூப் சாலையில் ரோந்து பணியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சந்திரமோகன் என்பவரும் அவரது தோழியான தனலெட்சுமியும் போலீசாரை தரக்குறைவாக பேசினர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து இவர்களது ஜாமின்மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தற்போது ஜாமின் வழங்கியுள்ளது.
மேலும், சந்திரமோகன் மட்டும் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.