இந்துக்களை தாக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளை கண்டித்து, சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
கனடாவில் பிராம்டன் பகுதியில் உள்ள இந்து கோயில் மற்றும் பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மற்றும் இந்து – கனடியன் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கனடா நாட்டில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக அண்ணா சாலையில் திரண்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.