ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
திருப்பதிக்கு நிகராக ஸ்ரீசைலம் கோயிலை மேம்படுத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், ஸ்ரீசைலத்துக்கு பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் விதத்தில், கடல் விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
இதற்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையிலிருந்து புறப்பட்ட கடல் விமானம், வானில் பறந்து ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தை சென்றடைந்தது.
வானிலும் நீரிலும் செல்லக்கூடிய இந்த விமானத்தில் 14 பேர் வரை பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.