ஹிமாச்சல பிரதேச மாநிலம் சமோசா விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான மாநில அரசைக் கண்டித்து பாஜக யுவ மோர்ச்சா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது துணியொன்றில் அச்சிடப்பட்டிருந்த சுக்விந்தர் சிங்கின் உருவப் படத்துக்கு, அவர்கள் சமோசாவை ஊட்டிவிட்டனர்.
இது தொடர்பான காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சமோசா மாயமானதற்காக சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசு விசாரணை நடத்தியதாக நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.