நடிகர் டெல்லி கணேஷின் மறைவு தனிப்பட்ட முறையில் தமக்கு பேரிழப்பு என பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள டெல்லி கணேஷ் உடலுக்கு பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா அஞ்சலி செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி கணேஷ் 30 ஆண்டுகளாக தம்முடைய நண்பர் என தெரிவித்தார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என தெரிவித்தார்.
இதேபோல் டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் மனம் முழுக்க நிறைந்திருக்கும் மகத்தான கலைஞன் டெல்லி கணேஷ் என தெரிவித்தார். அவர் இருக்கும் இடம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும், டெல்லி கணேஷ் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை எளிதாக கடந்துவிட முடியாது என்றும் தெரிவித்தார்.