பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தையின் பிரதான வாயிலை விரைந்து திறக்க வலியுறுத்தி, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தையின் பிரதான வாயிலை பராமரிப்பு பணிக்காக உழவர் சந்தை நிர்வாகம் மூடியது.
இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், 2 மாதங்களுக்கு மேலாக மூடி வைத்துள்ள பிரதான வாயிலை விரைந்து திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். திடீர் போராட்டத்தால் உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.