அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் உக்ரைன் உடனான போரை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், உக்ரைன், ரஷ்யா போரை நிறுத்துவேன் என பேசி வருகிறார்.
இதனை நடத்தி காட்டுவாரா என உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழலில், டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு உக்ரைன் உடனான போரை தீவிரப்படுத்த வேண்டாம் என்றும், போரை கைவிட வேண்டும் என அறிவுரை வழங்கி உள்ளார்.