ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் முடிவை பாகிஸ்தான் கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. ஆனால், 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாத நிலையில், இம்முறையும் செல்லப்போவதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலத்த நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது.
இதனால் கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்வாங்கும் பட்சத்தில், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இலங்கையில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.