ராமநாதபுரம் மாவட்டம் குளத்தூரில் துணி துவைக்க பயன்படுத்தப்பட்ட கல்லில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சேதுபதி மன்னரின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குளத்தூர் அரசு உயர்நிலை பள்ளியின் முன்னாள் மாணவரான பர்ஜித், தனது வீட்டுக்கு அருகே கிடந்த கல்லில் கல்வெட்டு இருப்பதாக அப்பள்ளி மாணவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான ராஜகுருவுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.
தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்களுடன் அப்பகுதிக்கு வந்த ராஜகுரு கல்வெட்டை படித்து ஆய்வு செய்தார். பின்னர், சேதுபதி காலத்தைச் சேர்ந்த இந்த கல்வெட்டு இம்மன்னரது வரலாற்றுக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக விளங்குவதாக தெரிவித்தார்.