மத்தியில் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போதிலும் மகாராஷ்டிராவுக்கு சரத் பவார் செய்த நலத்திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மும்பையில் பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், இதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புறக்கணித்ததாகவும் குற்றம்சாட்டினார்.
மகாராஷ்டிர முதலமைச்சராகவும், 10 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையிலும் அங்கம் வகித்த சரத் பவார், மகாராஷ்டிரா நலனுக்காக மேற்கொண்ட நலத்திட்டங்கள் தொடர்பாகவும் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
மேலும், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர்தான் மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததாகவும் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தார்.