தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது என தெரிவித்தார்.
அரசியல் தலையீடு இருப்பதால் காவல்துறை செயல்பட முடியாமல் தவிக்கிறது எனவும் அவர் கூறினார்.
மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் தனது தந்தையின் பெயரை வைத்தால் மட்டும் போதுமா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்,மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா எனவும் சாடியுள்ளார்.