நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த பால்துரைக்கு 4 மகள்கள் இருந்தனர். இவரது 3-வது மகள் செல்வம், பெருமாள்புரத்தில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தார்.
இந்நிலையில் தங்கை சுதர்சனாவை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து சென்ற செல்வம், மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிவாஜி நகர் பகுதி அருகே சாலையை கடக்க செல்வம் முயன்றுள்ளார்.
அப்போது வேகமாக வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவி செல்வம் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.